Wednesday, October 27, 2004

'பாரிஸ் கதைகள்'

அப்பால் தமிழ் குழுமத்தின் நூல் வெளியீட்டு தொடரில் சிறுகதைத் தொகுப்பு நூலான 'பாரிஸ் கதைகள்' பாரிசில் சிறப்புற வெளியிடப்பட்டது. கடந்த 22-10-2004 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அப்பால் தமிழ் குழுமத்தினரின் உள்ளகச் சந்திப்பின்போது அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.கா.வே. பாலகுமாரன் இந் நூலை வெளியிட்டு வைத்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் பிரான்சுக்கு வருகை தந்த பாலகுமாரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வகையில் இந்த உள்ளகச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பால் தமிழ் குழுமத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பாக திரு.இரவீந்திரன், திருமதி. சிவரஞ்சினி, திரு.நல்லையா, திரு.வின்சார்ள்ஸ், திரு.நவநீதன், திரு.நுகேஷ்வரன், திரு.கதிர்தீபன், திருமதி.சுமத்திரி, தளநெறியாளர் கி.பி.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் சிறப்புரையாற்றிய கா.வே.பாலகுமாரன் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு இலக்கியம் சிறந்த பணியாற்றுகின்றதென குறிப்பிட்ட அவர் புலம்பெயர் வாழ்வின் மறைபாகத்தை இக்கதைகள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் புகழ்ந்துரைத்தார். தன் நண்பர்களில் ஒருவரான நல்லையா கதை எழுதியிருப்பதை காணும் போது புலம் பெயர் வாழ்க்கை தரும் வலியினை உணரமுடிவதாகவும் சுட்டிக்காட்டினார். நூலின் முதல் பிரதியை கிறிஸ்ரி பெற்றுக்கொண்டார்.

நன்றி:அப்பால் தமிழ்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Tuesday, October 26, 2004

உணர்வுகள்!

ஆசிரியர்: சு.பொ.பரமேசுவரன்
வெளியீடு: பூர்ணிமா பதிப்பகம், புதிய எண் 5, ஆண்டாற் நைநியப்பன் தெரு,
34, மந்தைவெளி லேன், மயிலாப்பூர், சென்னை-4
மின்னஞ்சல்: poornimaapublication@yahoo.in

""நெடுந்தீவைச் சேர்ந்த சு.பொ.பரமேசுவரன் 'நெடுதல் வாடைக்' கவிதைகளை நெஞ்சில் நிறுத்தி வடித்துள்ளார். கவிதைக் களத்து மேட்டில் வைக்கோல் போர்களைக் குவிக்காமல், கருத்துகள் குருத்து விடும் கதிர்மணிகளை நிரப்பியுள்ளார். எழுத்துச் சேதம் ஏற்படவில்லை. சுற்றுச் சூழல் மாசுபடாதிருக்கவும், இயற்கைவளம் பெறவும்,புவிக்காதலர் இயக்கத்தை தோற்றுவிக்க முயல்கிறார். அவரின் இந்தத் தத்துவத்திற்கு அவர்தம் கவிதைத் தொகுப்பு 'தமிழில் ஒரு தாஸ்கபிடல்'.

இது விற்பனைக்கு அல்ல. வெளிக்காட்ட மட்டுமே என்கிறது அவர் எழுத்து. 'நாய் கூடத் தன் மொழியை குரைத்துரைக்கும்' எனக் குமுறுகிறார். 'தரணியிலே தமிழருக்கோர் தனி நாடுண்டேல் தமிழீழம் எனச் சொல்லத் தயங்காதீர்கள்!' என்னே அவர்தம் பாரதி நோக்கு. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே பரமேஸ்வரன் பாடல் படித்து விட்டோமென்று' என் கவிதை நெஞ்சம் களிப்படைகின்றது. இவர்தம் சிந்தனைகளை 'மனதில் நினைப்போம் ஒரு கணம்! மானுடம் மலரும் மறுகணம்! இதுவும் அவர் கருத்தே. வாழ்க வளர்க..." - கலைமாமணி தஞ்சைவாணன் (நூலிலிருந்து)

நன்றி:பதிவுகள்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Saturday, October 23, 2004

சரம்

ஆசிரியர்:ஆர்.ஏ.நாயகி
பக்கம்:35
விலை:100.00
வெளியீடு:நலன் அபிவிருத்திச் சங்கம்,புனித யாகப்பர் மகாவித்தியாலயம்,குருநகர்,யாழ்ப்பாணம்,இலங்கை.

மதம்,தமிழ்,போராட்டம்,விடுதலை,தலைவன் எனத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிஞரின் முதலாவது கவிதைத் தொகுதி.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

சிறுகதை

ஆசிரியர்:சி.சுதந்திரராஜா
பக்கம்:40
விலை:60.00
வெளியீடு:சாந்தி பிறின்ரேர்ஸ்,யழ்ப்பாணம்,இலங்கை.

மல்லிகை இதழில் வெளியான பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு.இது ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Saturday, October 16, 2004

மீண்டும் துளிக்கும் வசந்தம்

ஆசிரியர்:அம்புலி
பக்கம்:107
விலை:100.00
வெளியீடு:மகளிர் வெளியீட்டுப் பிரிவு,தமிழீழ விடுதலைப் புலிகள்.கிளிநொச்சி.

விடுதலைப் போர்க் காலத்தில் உருவாகிய போராளிக் கவிஞர் அம்புலியின் 35 கவிதைகளின் தொகுப்பு."இக்கவிதைகள் தீக்குளித்துக் கொண்டிருக்கும் எனது தேசத்தின் நெஞ்சிலெழுந்த நெருப்புகள்" என்கிறார் கவிஞர்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

வீதியெல்லாம் தோரணங்கள்

ஆசிரியர்:தாமரைச் செல்வி.
பக்கம்:84
விலை:170.00
வெளியீடு:மீரா பதிப்பகம்,c- 3/5,அன்டர்சன் தொடர்மாடி,பார்க் வீதி,நாரஹன் பிட்டி,கொழும்பு,இலங்கை.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தைப் பின்புலமாகக் கொண்ட நாவல்.இது ஆசிரியையின் நான்காவது நாவல்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Wednesday, October 13, 2004

நினைவுள் மீள்தல்

ஆசிரியர்:தானா விஷ்ணு
பக்கம்:60
விலை:75.00
வெளியீடு:மீளுகை 2, இமையாணன் கிழக்கு,உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்.இலங்கை

"குருதியும் கந்தகமும் கலந்த வாசனையாக திரண்ட நாட்களில் விஷ்ணுவின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன"என்கிறார் கருணாகரன்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

தேசத்தின் பாடல்கள்

ஆசிரியர்:வளவை வளவன்
பக்கம்:183
விலை:150.00
வெளியீடு:நீதி வளவன்,கனகராயன்குளம்.வன்னி,இலங்கை

பல்வேறு பத்திரிகைகள்,சஞ்சிகைகளில் வெளியான 21 சிறுகதைகளின் தொகுப்பு."உலக அரங்கில் விடுதலை வேண்டிப் போராடும் அனைத்துத் தேசங்களின் பாடல்கள் எனவும் கொள்ளலாம்"என்கிறார் ஆசிரியர்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Saturday, October 09, 2004

மலையகம் வளர்த்த கவிதை

(malaiyakam valarththa kavithai)

ஆசிரியர்:அந்தனி ஜீவா
பக்கம்:40
விலை:75.00
வெளியீடு:மக்கள் கலை இலக்கிய ஒன்றியம்.18/13,பூரணவத்தை,கண்டி,இலங்கை

நாடகாசிரியரும் பத்திரிகையாளருமான ஆசிரியர் மலையகக் கவிதை வளர்ச்சியைப் பற்றி எழுதிய ஆய்வரங்கக் கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

அந்த ஒரு உயிர்தானா உயிர்?

(Antha oru uyirthana uyir)
ஆசிரியர்:எஸ்.எம்.கோபாலரத்தினம்
பக்கம்:152
விலை:150.00
வெளியீடு:நிகரி.24, 6/9 இனிசியம் தெரு,தெகிவளை,இலங்கை

மூத்த பத்திரிகையாளரான கோபு 'தினக்கதிர்' பத்திரிகையில் எழுதிய தலையங்களிற் சிலவும்,ஈழநாதம் பத்திரிகையில் வெளியான இரண்டு தலையங்கங்களும் கொண்ட தொகுப்பு.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Tuesday, October 05, 2004

கூலிக்கு வந்தவன்

ஆசிரியர்:ச.வே.பஞ்சாட்சரம்
பக்கம்:124
விலை:170.00
வெளியீடு:தூண்டி,141,கேணியடி,
திருநெல்வேலி,யாழ்ப்பாணம்.

மரபுக்கவிஞராக அறியப்பட்ட ஆசிரியர் 36 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல்.40 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலச்சூழ்நிலையை பின்புலமாகக் கொண்டுள்ளது

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

ஈழத்தமிழர் எழுச்சி

ஆசிரியர்:எஸ்.எம்.கார்மேகம்.
பக்கம்:382
விலை:500.00
வெளியீடு:கார்சன்ஸ் பதிப்பகம்,21/17,பீட்டர்ஸ் காலனி
இராயப்பேட்டை, சென்னை.

"ஈழத்தமிழினப் பிரச்சனையின் மூலவேர்,அது வளர்க்கப்பட்டுச் சிக்கலாக்கப்பட்ட வரலாறு,அச்சிக்கலைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட-மேற்கொள்ளத்தவறிய பரிகார நடவடிக்கைகளின் ஒரு விரிவான அலசலே இந்நூல்" என்கிறார் ஆசிரியர்.இவர் மலையகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஆவார்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்