Wednesday, October 27, 2004

'பாரிஸ் கதைகள்'


அப்பால் தமிழ் குழுமத்தின் நூல் வெளியீட்டு தொடரில் சிறுகதைத் தொகுப்பு நூலான 'பாரிஸ் கதைகள்' பாரிசில் சிறப்புற வெளியிடப்பட்டது. கடந்த 22-10-2004 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அப்பால் தமிழ் குழுமத்தினரின் உள்ளகச் சந்திப்பின்போது அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.கா.வே. பாலகுமாரன் இந் நூலை வெளியிட்டு வைத்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் பிரான்சுக்கு வருகை தந்த பாலகுமாரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வகையில் இந்த உள்ளகச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பால் தமிழ் குழுமத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பாக திரு.இரவீந்திரன், திருமதி. சிவரஞ்சினி, திரு.நல்லையா, திரு.வின்சார்ள்ஸ், திரு.நவநீதன், திரு.நுகேஷ்வரன், திரு.கதிர்தீபன், திருமதி.சுமத்திரி, தளநெறியாளர் கி.பி.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் சிறப்புரையாற்றிய கா.வே.பாலகுமாரன் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு இலக்கியம் சிறந்த பணியாற்றுகின்றதென குறிப்பிட்ட அவர் புலம்பெயர் வாழ்வின் மறைபாகத்தை இக்கதைகள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் புகழ்ந்துரைத்தார். தன் நண்பர்களில் ஒருவரான நல்லையா கதை எழுதியிருப்பதை காணும் போது புலம் பெயர் வாழ்க்கை தரும் வலியினை உணரமுடிவதாகவும் சுட்டிக்காட்டினார். நூலின் முதல் பிரதியை கிறிஸ்ரி பெற்றுக்கொண்டார்.

நன்றி:அப்பால் தமிழ்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home