Wednesday, September 21, 2005

பாதையின் மீதொரு பாவை

பாதையின்
மீதொரு பாவை நடந்தாள்.
பார்வையிலே ஒரு சேதி
எறிந்தாள்.
பாதையின் மீதொரு பாவை
நடந்தாள்....

காதினில் அவள் கைவளை
கேளேன்.
கண்களில் அவள் மைவிழி
காணேன்.
கோதை எறிந்ததோர் சேதி
புகுந்து
கொண்டஎன் நெஞ்சில்
வேறொன்றும் ஓரேன்.
பாதையின் மீதொரு பாவை
நடந்தாள்...

காலையில் அவள் போகையிற்
கண்டேன்
காரணம் இன்றி அலைந்து
திரிந்தேன்.
மாலையில் அவள்
மீள்கையில் நின்றேன்.
மாதரசீ என்று
கூவவிழைந்தேன்.
பாதையின் மீதொரு பாவை
நடந்தாள்....

கோலம் குனிந்து புனைந்தாள்.
அவளுடைய
கோலம் கண்டுள்ளம்
குமைந்தேன்
கோலம் குனிந்து புனைந்தாள்....
காலம்:விடிபொழுது;
முன்றில்,இடம்;கறுத்த
ஆலம் விழியிரண்டும்
அங்கிங்கெடாதபடி
கோலம் குனிந்து புனைந்தாள்...

நீளம் மிகுந்த பின்னல்
கீழ்மண்ணிலத்தழுந்த
வாழ்வின் சுவை நிரம்பி மார்பின்
துணிதளும்ப,
வீழ்கின்ற கோடுகளில் ஓடும் நகம்
மினுங்க,
ஆளும் விழியிரண்டும்
ஆர்க்கும் கொடாதபடி,
கோலம் குனிந்து புனைந்தாள்..


*************************************


ஏனோ எனை அவர் அவ்விதம்
பார்த்தார்?
ஏதோ பொருள் ஒன்றோ
என்னிடம் கேட்டார்?
ஏனோ அவர் எனை அவர் அவ்விதம்
பார்த்தார்..?

நானோ சிறியவள்.
அஞ்சி உலைவேன்.
நாணாதொழிதலும்
ஏலாது நைவேன்.
"தேனே" எனதுடல் என்றோ
நினைவார்?
தேவை எனை எனில், எங்கே
அலைவார்?

ஏனோ எனை அவர் அவ்விதம்
பார்த்தார்...?

மகாகவியின் மாநிலத்துப் பெருவாழ்வுகுறுங்காவியத்தில் இருந்து

(கவிஞனும் தீராத விளையாட்டுப் பிள்ளையுமான அண்ணன் டி.சேயுக்கு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

7 Comments:

At 2:20 PM, Blogger -/பெயரிலி. said...

தாவுகவியும் தீராத விளையாட்டுப்பிழையுமான அண்ணன் டிசேக்கு என்று சரியாக எழுதியிருக்கவேண்டும்

 
At 2:25 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

டி.சேயின்ர படம் நல்லாயிருக்கு.

 
At 4:40 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ப்ரோ உங்களுக்கு அண்ணனோடை எப்பவும் பகிடி

 
At 9:47 PM, Blogger இளங்கோ-டிசே said...

தமிழ்ப்படங்களில் இப்போது நடிக்காத ரியாசென்னின் படத்தைப் போட்டு என் வேதனையை இன்னும் கூட்டிய இந்தப்பதிவுக்கு எனது கறுப்புக்கொடியை முதலில் காட்டிக்கொள்கின்றேன். என்றாலும் எனக்குப் பிடித்த இந்தப்பாடலில் ரியாசென்னின் பங்கும் இருப்பதால் ஈழநாதனை மன்னித்து விடுகின்றேன். மகாகவியின் கவிதையைப் போட்டு அவரது மகன் 'கவி இளவரசனுக்கு' சமர்ப்பணம் செய்யாததால் இன்னொருமுறை மெக்சிக்கோ போய் ஏதாவதொரு 'க்ளப்பில்' இருந்துகொண்டு தனயன், என்னைத்திட்டி ஒரு கவிதை எழுதக்கூடும். எனக்கு எதற்கப்பா வீண் பிரச்சினை? நான் தாவு மந்தியாகவோ மயிலாகவோ கானகத்தில் தீராத விளையாட்டுப் பிழையாக இருந்துவிட்டுப் போகின்றேன் :)))

 
At 10:09 PM, Blogger SnackDragon said...

:-))

 
At 3:55 AM, Blogger -/பெயரிலி. said...

பிழையாயிருந்தாலும் பீளையாயிருக்காத ப்ரோவினை வாத்தாளாதார் சங்கத்தின் சார்பிலே வாத்துகிறோம்

 
At 8:24 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வாத்துக்கூட்டங்கள் சார்பில் நாங்களும் வாத்துகிறோம்

 

Post a Comment

<< Home