Monday, January 24, 2005

உயிர் கொல்லும் வார்த்தைகள்



ஆசிரியர்:சேரன்
விலை:90.00(இந்திய ரூபா)
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'திசை' கொழும்புவிலிருந்து வெளியான 'வீரகேசரி' நாளிதழ் மற்றும் 'சரிநிகர்', கனடாவிலிருந்து பிரசுரமான 'செந்தாமரை' ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல். ஈழப் போராட்டம், ஐரோப்பிய பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்திய ராணுவத் தலையீடு, ஈழத்து முஸ்லீம்களின் நிலை என பல பொருள்கள் சுதந்திரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. புதிய தகவல்களையும் புதிய பார்வையையும், அங்கதத்துடன், தெளிந்த கவித்துவ நடையில், சேரன் வெளிப்படுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், இதழியல் சுதந்திரம் ஆகியவற்றை இவை முன்னிறுத்துகின்றன. கோபத்தையும் சோகத்தையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் சேரனின் இந்தக் கட்டுரைகள் தீவிர விவாதங்களை எழுப்ப வல்லவை.....(காலச்சுவடு).

நன்றி காமதேனு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

2 Comments:

At 2:32 PM, Blogger Narain Rajagopalan said...

ஈழநாதன், நீங்கள் சொல்லும் சேரன் கவிஞர் தானே. அவரின் கவிதைகளை அவ்வப்போது காலச்சுவட்டிலும், பிற சிற்றீதழ்களிலும் படித்திருக்கிறேன்.

 
At 3:08 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ஈழத்தின் புகழ் பெற்ற கவிஞர். மகாகவி என அழைக்கப்படும் உருத்திரமூர்த்தி அவர்களுடைய மகன்.தற்போது கனடாவில் வதிகிறார்.

 

Post a Comment

<< Home