Monday, September 19, 2005

வா(ல்) வெள்ளியே

வலைப்பதிவுக்குள் கால்பதித்த பின் இரண்டாவது தடவையாக நட்சத்திரமாக பிரகாசிக்கும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது சுற்றுக்கும் தாக்குப்பிடித்துவிட்ட குத்துச் சண்டைவீரன் கணக்காய் என்னை நானே பெருமிதத்துடன் தட்டிக்கொள்கிறேன்.(மவனே இந்தக் குத்துடன் நீ காலி என்பவர்களை பின்னூட்டத்தில் சந்தித்துக் கொள்கிறேன்).

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுக்கி வலைப்பதிவுகளில் விழுந்தேன்.விழுந்த போது பெயரளவில் கூட யாரையும் தெரியாது,எழுதும் போது யாருக்காக எழுதுகிறேன் என்றும் தெரியாது எழுதியதை யாரெல்லாம் படிக்கிறார்கள் என்றும் தெரியாது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது மாதிரி இருந்தது.

அந்த வேளையில் முடிந்த முடிவுகள் நிறையவே கொண்டுதான் இந்த வலைப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.தமிழீழ விடுதலைப் போராட்டம்,பெண்ணியம்,தமிழ்ச்சமூகம்,இலக்கியம் பற்றியெல்லாம் முடிந்த முடிவுகள் பலவற்றை வைத்திருந்தேன்.வைத்திருந்தது மாத்திரமன்றி அவைதான் சரியானவை என்றும் நம்பிக்கொண்டிருந்தேன்.என்னுடைய ஆரம்பப் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு அது புரிந்திருக்கும்.

இன்று மாற்றம்தான் நிரந்தரம் என்று நான் நம்புவதற்கு முழுமுதற் காரணமாய் இருப்பது இந்தத் தமிழ் வலைப்பதிவுலகம்.

இன்றுகூட குறைபாடுகள் நிறையவே இருந்தாலும் நான் வளர்ந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிறது வலை பதிய ஆரம்பித்து.இந்தக் குறுகிய காலத்தில் நான் கற்றுக்கொண்டவை ஏராளம் கற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தவையும் ஏராளம்.பெற்றுக்கொண்ட நண்பர்கள் ஏராளம்.

குறைகளைச் சுட்டியவர்கள்.நிறைகளைப் பாராட்டியவர்கள்

எவரையும் இழந்ததாய் நினைவில்லை.

வாசிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவும் ஒரு புத்தகத்திற்கு இணையானதாகத் தோன்றுகிறது எனக்கு.முற்றும் வாசகத்துடன் முடிந்து போய் மனதில் மட்டும் கேள்விகளை எழுப்பி விடைகாணா வினாக்களுடன் அலையவிட்ட புத்தகங்களைப் போலன்றி வினவவும் விடையிறுக்கவும் வசதி செய்துகொடுத்தவை வலைப்பதிவுகள்

இது எனது பள்ளிக்கூடம்

வலைப்பதிவுகள் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பட்டியல் போட்டால் இந்த வாரம் போதாது.அதனைச் சாத்தியமாக்கிய நண்பர்களான

தமிழ்மணம் காசி,மதி மற்றும் சந்திரவதனா,பத்ரி,மீனாக்ஸ்,அன்பு,செல்வராஜ் ஆகியோருக்கும்
எழுத்துருக்களையும்செயலிகளையும் செய்து கொடுத்து பதிவதற்கு இடமும் கொடுத்த மோகன் சுரதா ஆகியோருக்கும்.

என்றும் தோழர்களாய் இருக்கும் உங்களுக்கும் நன்றி சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில விதயங்களைப் பேசலாம் என்று நினைக்கிறேன்.அவை யாரையுமே வேண்டுமென்று காயப்படுத்த அல்ல ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாமே என்று மனத்தாங்கலின் வெளிப்பாடு மட்டுமே ஆகவே எல்லோரும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்பித் தொடர்கிறேன்

(யாழ் நெட்டில் அமைந்த வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் படிக்க முடியவில்லை என்று மாலனும் பிரகாசும் தெரிவித்திருந்தமையைக் கருத்திற் கொண்டு வலைப்பதிவைத் தற்காலிகமாக இங்கே மாற்றியிருக்கிறேன்எனது முன்னைய பதிவுகளைப் படிக்க

வலைப்பூவில் ஆசிரியராக இருந்தபோது எழுதியவற்றைப் படிக்க

எனது இருப்பு

இங்கு முதல் இங்கு வரை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

20 Comments:

At 12:38 PM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

வாங்க வெள்ளியே!

 
At 12:55 PM, Blogger இளங்கோ-டிசே said...

வாரும் வாரும்.
வந்திரும்படியும்....இல்லை வந்திருந்தெழுதும்.

 
At 12:58 PM, Blogger Jayaprakash Sampath said...

வருக ஈழநாதன்...

 
At 2:19 PM, Blogger Mookku Sundar said...

வாங்க சார்...செளக்கியமா..??

இந்த வாரத்தில் சரக்கு முறுக்காகவே இருக்கும்போல..ம்..நடத்துங்க.

 
At 2:34 PM, Blogger Thangamani said...

Vaanga Elanaathan!

 
At 2:39 PM, Blogger Ramya Nageswaran said...

ஈழநாதன்.. இந்த வாரம் ஜொலிக்க வாழ்த்துக்கள்

 
At 2:42 PM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

welcome sir, this week's star

 
At 4:08 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

வாரும். வாரும்.
வேற என்னத்தைச் சொல்ல?

 
At 4:56 PM, Blogger அன்பு said...

வாங்க... கலக்குங்க.
(அப்புறம் சவுக்கியமா தம்பி, சந்திக்கிற இடத்துலதான கேட்க முடியும்:)

 
At 5:25 PM, Blogger நளாயினி said...

மாற்றங்கள் நிறைந்தது தான் வாழ்க்கையின் தேடல். அதை உணர்பவர்கள் வெளியில் சொல்லவதில்லை தைரியமாக சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயமாக உங்களால் பலதை சாதிக்க முடியும்.

 
At 5:31 PM, Blogger எம்.கே.குமார் said...

காத்திருக்கிறேன் ஈழநாதன்!

கலக்க வாழ்த்துகள்!

எம்.கே.

 
At 7:09 PM, Blogger Sri Rangan said...

நன்றாகச் சொல்கிறீர்கள் ஈழநாதன்,மேலும் சொல்லுங்கள்.மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்.

 
At 11:49 PM, Blogger சன்னாசி said...

வாழ்த்துக்கள் ஈழநாதன்

 
At 3:31 AM, Blogger நற்கீரன் said...

உங்களின் பார்வைகளில் நிச்சியம் மாற்றத்தை பார்க்க முடிகின்றது. "முடிந்த முடிவுகள்" என்றில்லாமல் பல நிலைகளில் இருந்து அலசி எழுதுகின்றீர்கள். ஒரு விடயத்தின் பன்முக, பலக்கிய தன்மைகளை விளங்கி எழுத முனைகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

 
At 4:32 AM, Blogger theevu said...

வா(ல்) வெ(ள்)ளியே
நிறைவாய் தரவும்

 
At 8:56 AM, Blogger deep said...

varuga!

 
At 9:28 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வரவேற்பிற்கு நன்றி நண்பர்களே.உங்கள் அன்பு இருக்கும்வரை குறைவொன்றுமில்லை

 
At 3:19 AM, Blogger SnackDragon said...

அடடே நான் தான் கவனிக்கவில்லையோ. வாங்க ஈ.நா.

 
At 12:55 AM, Blogger Boston Bala said...

இந்த வாரம் சன் டிவியில் 'ப்ரியா'. தமிழ்மணத்தில் ஈழநாதன் :P

வாங்க சார்....

 
At 8:21 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வரவேற்பிற்கு நன்றி நண்பர்களே

 

Post a Comment

<< Home