Wednesday, February 16, 2005

பிணம் செய்யும் தேசம்



ஆசிரியர்:இளைய அப்துல்லாஹ்(எம்.என்.எம்.அனஸ்)
வகை:கவிதைத் தொகுப்பு
விலை:125.00(இந்திய ரூபா)
வெளியீடு:உயிர்மை,சென்னை.இந்தியா.

லண்டன் தீபம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராகத் திகழும் எம்.என்.எம். அனல் பத்திரிகை, வானொலி போன்ற ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலப் பரிச்சயம் கொண்டவர். இளைய அப்துல்லாஹ், மானுட புத்ரன், ஹரீரா அனஸ் ஆகிய புனைபெயர்களில் இவர் இலங்கையின் இலக்கிய தொகுதிக்கு வளம் சேர்த்திருக்கிறார். 'எங்கள் தாயகமும் வடக்கே' என்ற இவரது ஒலிப்பதிவுக் கவிதை (ஒலிப்பேழை) ஈழத்துக் கவிதை உலகிலும் அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

புலம் பெயர் சஞ்சிகைகளில் தனித்துவமிக்க இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.(உயிர்மை)
நன்றி:காமதேனு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 1:19 AM, Blogger எல்லாளன் said...

அப்படியே இவர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவரென்றும் குறிப்பாக தேசம் சஞ்சிகையில் இவர் எழுதிய கட்டுரையில் புத்தக வெளியீடு (இவருடையதல்ல) தொடர்பாக புலிகளுடன் ஏற்பட்ட சிக்கல் ஒன்றினைப் பற்றிக்கூறி உங்கள் புணர் உறுப்புக்களை வெட்டித்தாருங்கள் என்று முடியும் யாரோ ஒருவரின் கவிதையினை மேற்கோள் காட்டி முடித்திருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

 

Post a Comment

<< Home