Thursday, November 17, 2005

பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்












ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.


(மேலதிக செய்தி உதவி:ஜனநாயகம் அண்ணா)

இந்நிகழ்வைப் படம்பிடிக்க முயன்ற பெல்ஜியம் வாழ் தமிழ் இளைஞர் ஒருவர் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினரான புலம்பெயர் வாழ் ஜனநாயகப் பேரவையினரால் தாக்கப்பட்டு அவரது படப்பிடிப்புக் கருவி சேதமாக்கப்பட்டுள்ளது.

இதே வழியில் தொடர்ந்தும் புலம் பெயர் வால் ஜன நாய் அகத்தை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்

கீழே வைக்கப்பட்டிருக்கும் போத்தல்களில் பச்சை :ஹெனிக்கன்(ஏதோ இந்தப் பொடிப்பயலுக்குத் தெரிந்தது) மற்றது என்ன பிராண்ட் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த சமூகப் பொறுப்புணர் வாலர் பட்டம் கிடைக்கும்.


பட உதவி நன்றி அநாமதேயம்:ஜனநாயகம் வலைப்பதிவு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

21 Comments:

At 1:30 PM, Blogger Thangamani said...

ஒரு 23 பேர் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தது எந்த விதத்திலும் குறைவானதல்ல. ஆனால் அந்த 23பேரே தங்களை அம்பலப்படுத்துகிறதாய் நினைத்துக்கொண்டு ஒரு புகைப்படக்காரரை புலிகளின் வன்முறையை எதிர்த்து தாங்கள் நடத்தும் போராட்டத்தின் போதே தாக்கமுடியுமெனின் இவர்கள் கையில் தட்டிகளுக்கு பதில் ஏகே47 களும், இருக்கும் இடம் வன்னியாகவும் இருந்தால் இன்று புலிகளையே தூக்கி சாப்பிட்டுருப்பார்கள் என்பது மட்டும் புரிகிறது. வாழ்க ஜனநாயகம்.

 
At 1:42 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

தங்கமணி அண்ணா நானும் அதனைத் தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இவர்கள் விரும்புவதெல்லாம் அதிகாரம் அன்றி மக்களின் சுமுக வாழ்க்கை அல்ல.இவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.ஆனால் கடந்த மாதம் இதே இடத்தில் கூடிய இருபதினாயிரம் மக்களையும் இவர்கள் ஆட்டு மந்தைகள் என்று வர்ணித்ததை நினைவூட்டவே இந்தப் பதிவு

அன்பின் Farah அண்ணாச்சி உங்கள் தொல்லை தாங்கமுடியாமல்தான் வழக்கமான பதிவை விட்டு இங்கே வந்தேன் இங்கேயுமா?

 
At 2:31 PM, Blogger கொழுவி said...

ஈழநாதன் தம்பி.. தமிழ்மணத்தில முழுக்க உம்மடை பதிவாக தான் கிடக்கு.

சரி விடும். அதென்ன ஹெனிக்கன்.. குளிருக்கு குடிக்கிற மருந்தோ.. பெல்ஜியத்தில சரியான குளிராம் அண்டைக்கு எண்டு சினேகிதன் சொன்னான்.

நீரும் கலர் கலரா பதிவு போட தொடங்கிட்டீர்..

ஐசே.. 20 000 பேர் கலந்து கொண்டாலும் புலிக்கு ஆதரவா எண்டால் அது ஆட்டு மந்தைகள் கூட்டம் தான்.

23 பேர் எண்டாலும் அது புலிக்கு எதிராக எண்டால்.. அது ஜனநாயகத்தின் குரலாளர்கள்..

ஆட்டு மந்தைகள் எண்டு சொல்லுறதுக்கு அவைக்கு இருக்கிற அதே உரிமையை பயன்படுத்தி நானும் சொல்லுறன்.. படங்களைப் பாத்திட்டு நான் நினைச்சன் ஏதோ சந்தியிலை அக்சிடன்ற் ஆக்கும்.. அது தான் கூட்டமா நிக்கினம் எண்டு..

 
At 6:41 PM, Blogger P.V.Sri Rangan said...

உது சரியான நக்கல்.உந்தப் பெரிய விமர்சனமெல்லாம் செய்யும் நீங்கள்,உங்கட ஆக்களால பிடிக்கப்பட்ட படம்வேறு போடுறியள்.அத்தத் தமிழ்ப்பெடியனை உந்த 23 கழிசடையள்(உங்கடபார்வையில்)சேர்ந்து தாக்கிய ஒரு படமும் கிடைக்கலையோ ஈழநாதரே!பீர் குடிப்பது தப்போ?அப்போ தமிழர்கள் ஒருவரும் குடிக்கிறது இல்லையெண்டுறியள்?ஆன்டன் பால அண்ணா சுத்தம் சைவப் பழம்தானே?ஈழத்திலை பனைகளில சீவத்தடையோ?வன்னியில மென்டிஸ் சாரயத்தைக் கொப்பி பண்ணித் தயாரிச்சு விக்கும் புலிகளும்,அதன் வால்களும் வடிவாகத்தான் பூச்சுத்துகினம்!கேழ்வரகில் தேன் வடியுதென்கிறார் ஈழநாதன் அதைக் கேட்கும் தங்கமணியும் 'ஆமா'ப் போடுறார்,மற்றவர்களுக்குத் தெரியும் இருவருக்கும் நட்டுக் கழண்டு போச்செண்டு.

 
At 6:47 PM, Blogger P.V.Sri Rangan said...

//ஆனால் அந்த 23பேரே தங்களை அம்பலப்படுத்துகிறதாய் நினைத்துக்கொண்டு ஒரு புகைப்படக்காரரை புலிகளின் வன்முறையை எதிர்த்து தாங்கள் நடத்தும் போராட்டத்தின் போதே தாக்கமுடியுமெனின் இவர்கள் கையில் தட்டிகளுக்கு பதில் ஏகே47 களும், இருக்கும் இடம் வன்னியாகவும் இருந்தால் இன்று புலிகளையே தூக்கி சாப்பிட்டுருப்பார்கள் என்பது மட்டும் புரிகிறது. வாழ்க ஜனநாயகம்.//

தங்கமணி சார் நன்றிகள்.ஆகப் புலிகள் வன்முறையாளர்கள் தான் எண்டு சொல்லாமல் சொல்கிறீர்கள்?உது புரியுமா இந்தப் புலி வால்களுக்கு?அறிஞன்,அறிஞன்தான்.

 
At 7:00 PM, Blogger கொழுவி said...

//மற்றவர்களுக்குத் தெரியும் இருவருக்கும் நட்டுக் கழண்டு போச்செண்டு//

இல்லயே.. எனக்கு தெரியேல்லயே.. மிஸ்டர் ஜனநாயகம்.. ஒருவேளை எனக்கும் நட்டுக் கழண்டு போச்சோ..

என்ன இருந்தாலுமண்ணை.. நான் உந்த 23 பேரையும் மந்தைக் கூட்டம் எண்டு சொல்ல மாட்டன்.. வேறை வேலையொண்டு மில்லாமல் உந்தக் குளிருக்கை வந்து நிக்க உவை என்ன மந்தைக் கூட்டமே.?

அது ஆரும் 20 000 பேர் வந்து நிப்பினம் அவையை பாத்து சொல்லுவம் என்ன..?

ம்.. அது சரி.. புலியள் செய்யிற கொலையளையும்.. ஜனநாயக விரோத செயல்களையும் படம் செய்யும் போது படம் பிடிச்சு தானே காட்டுறவை..

போங்கய்யா.. போங்க.. போய் உருப்படியா செய்யுங்க.. என்னையும் செய்ய விடுங்க.

 
At 7:03 PM, Blogger theevu said...

//படங்களைப் பாத்திட்டு நான் நினைச்சன் ஏதோ சந்தியிலை அக்சிடன்ற் ஆக்கும்.. அது தான் கூட்டமா நிக்கினம் எண்டு..//

:)

 
At 7:20 PM, Blogger P.V.Sri Rangan said...

This comment has been removed by a blog administrator.

 
At 7:29 PM, Blogger P.V.Sri Rangan said...

கொழுவிக் குட்டி வணக்கமுங்க.என்னங்க உப்பிடிக் கொட்டிப்புட்டீக?பஸ்களில் எல்லோரையும் ஒழுங்கு பண்ணி அவையள அள்ளிக் கொண்டுபோய் பெல்ஜியத்தில கொட்டக் காசு பணம் புலிகளிட்ட இருக்கு.பேர்ணில் இருந்து ரெண்டு பஸ்க்கள்,லுசார்ண்,செங்கார்ளள்,கூர்,சூரிக் தலா பல பஸ்கள் போய் அகதித் தமிழரை சுவிசில அள்ளின போதே நானும்தான் அவர்களோட போனனான்.எனக்குப் பூச் சுத்துறதை நிப்பாட்டுங்கோ.நானும்'கன்டோன்'பொலிசுக்கு அடிக்கடி வாறனான் எனக்குத் தெரியும் எத்தனை புலி வாலுகள் என்னென்னத்துக்காகப் பிடிபட்டு உள்ளுக்கு இருக்கினமெண்டு.இவ்வளவு கதைக்கிற உங்கட சரித்திரத்தைச் சொல்ல வைக்காதேங்கோ சாமி!ஒரு றாப்பனுக்குப் பெறுமதியில்லாத புலிப் பிரச்சாரத்துக்கு வக்காலத்து வாங்கிற உங்கட எழுத்தை என்னென்டு சொல்ல?லுசார்ணில உங்கட ஆக்கள் தமிழ் அகதியின்ர வீட்டில நகைத் திருட்டுச் செய்த கேசுக்கு யாரு சாமி டொல்மேச்சரெண்டு அவர்களிட்ட கேளுங்கோ சாமி.பொறுப்பாளரெண்டு வீடுகளுக்குத் தண்டப்போவது,பிறகு ஆளில்லாத வேளைகளில திருடக்'குண்டர்களை' அனுப்புவது புலிகளின் சுவிஸ் செயற்பாடுகளில ஒண்டென்கிறார், கன்டோன் பொலிஸ் அதிகாரி.லுசார்ன்ணுக்கு வாறீர்களா? கன்டோன் பொலிசில அடைபட்ட புலி வாலுகள காட்டுறன்?

 
At 7:36 PM, Blogger கொழுவி said...

//அள்ளின போதே நானும்தான் அவர்களோட போனனான்//

எட.. அறுவாங்கள்.. உங்களையும் ஏத்திக்கொண்டு போட்டாங்களே! ஏனண்ணை.. நீங்களாவது ஜனநாயகம் பாசிசம் எண்டேதாவது பேசி இறங்கியிருக்கலாம் தானே.. மற்றச் சனங்கள் தான் மோட்டுச்சனஙங்கள்.. மந்தைக் கூட்டம் மாதிரி போட்டுதுகள்.. நீங்களுமோண்ணை.. கடைசியில நிங்களும் அந்த மந்தைக் கூட்டத்தில ஒண்டெண்டதை சொல்லாமல் விட்டுவிட்டியளேயண்ணை..

அட.. நீங்கள் சுவிசோ.. நான் நினைச்சன் நீங்கள் என்ரை நாடு எண்டு.. அப்பிடிதானே அண்ணை நீங்கள் சொன்னனியள்..

ஏதோ நீங்கள் பணி புரியிற மென்பொருள் துறையை வைச்சுக் கண்டு பிடிச்சனான் எண்டு.. அப்ப அது பொய்யே.. சரி விடுங்கோ.. நீங்கள் ஏதோ தெரியாமல் செய்ததை நானும் அடிக்கடி சொல்லிக்காட்டுறன்..

அண்ணை புலிவாலுகள்.. உள்ளை இருக்கிற படியாலை புலிப் போராட்டம் சரியானதில்லை எண்ட முடிவு செய்யக் கூடாதண்ணை..

நீங்களும் பொலிசக்கு அடிக்கடி போறனியளோ.. அண்ணை.. ஊருக்கு போனால் புலியாலை உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லுங்கோண்ணை.. எல்லா கேசும் சரி வரும்.. எல்லாம் வெல்லலாம் அண்ணை.. ஒண்டுக்கும் யோசிக்க வேணாம்..

 
At 7:45 PM, Blogger P.V.Sri Rangan said...

//நீங்களும் பொலிசக்கு அடிக்கடி போறனியளோ.. அண்ணை.. ஊருக்கு போனால் புலியாலை உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லுங்கோண்ணை.. எல்லா கேசும் சரி வரும்.. எல்லாம் வெல்லலாம் அண்ணை.. ஒண்டுக்கும் யோசிக்க வேணாம்..//

உப்பிடிச் சொல்லியும் கோதாரி புடிச்சவன்கள் 'பீ'யைத் தவிர்த்துச் சீயைக் காட்டுகினமில்லை!...ம்...உமக்கு என்ன 'பீ'யோ,'சீ'யோ?

 
At 7:58 PM, Blogger கொழுவி said...

F அண்ணை.. எப்பவண்ணை c ஆகலாம்..?

 
At 8:11 PM, Blogger P.V.Sri Rangan said...

எம்பியாக இலங்கையிலிருந்திருந்தால்தான் 'சீ'உடனேயோ கிடைக்கும்!பூ...கோ...குண....'சீ'....ஜெ....மால்....ஆஆஆஆஆஆ,லுசார்ர்ர்ண்

 
At 8:14 PM, Blogger கொழுவி said...

//எம்பியாக இலங்கையிலிருந்திருந்தால்தான் 'சீ'உடனேயோ கிடைக்கும்!//

அப்ப டக்ளசுக்கு கட்டாயம் கிடைக்கும் தானே.. ஆனந்த சங்கரி மாமாவுக்கும் கிடைக்குமோ..

 
At 8:27 PM, Blogger P.V.Sri Rangan said...

உயிர் தப்பி சுவிசுக்கு வந்துட்டானுகவெண்டால் நிச்சியம்,கிடைச்சிடும்.

 
At 5:25 AM, Blogger P.V.Sri Rangan said...

பெல்ஜியத்தில் படம்பிடித்தவனைத் தாக்கியதோ?அது சரிதானே இதுpல தவறென்ன இருக்கு?ஒவ்வொரு தனிநபகர்களையும் வேவு பார்த்துச் சரிக்கட்டும் புலிகளட்டையிருந்து மாற்றுக்கருத்தாளர்கள் தப்புவதற்கு இதுகூடச் செய்யாட்டி எப்படிதான் உயிர் வாழ்வது?தங்கமணிக்கு இது எதுவுமே தெரியாதா அல்லது ஊரோடு ஒத்தோடுகிறாரா?மேற்குலகில உள்ள ஒவ்வொரு நாடுகளிலும்,ஒவ்வொரு நகாகளிலும்,ஒவ்வொரு தெருக்களிலும் எத்தனையெத்தனை தமிழர்கள் வசிக்கிறார்கள்,யார்,யார் எதிர்ப்பாளர்கள் எண்டதையே கணக்கெடுத்து வைச்சிருக்கும் புலிகள்(கவனிக்க:பெல்ஜியத்தில் மொத்தம் 47 தமிழ்க் குடும்பந்தான் இருக்கு என்ற ஈழநாதனின் புள்ளி விபரத்தை-ஜனநாயகத்தின் தளத்தில்) எவரையும் எந்த நேரத்திலும் அழிகத்தயாராக இருக்கிறது.இவர்களுக்குப் படம்பிடிச்சுக் கொடுப்பார்களாம்,அதையும் நாங்கள் பார்த்திருந்து மற்றவர்களையும் சாகக் கொடுக்கவேண்டுமாம் 'அறிஞர்'தங்கமணிக்கு!நல்லா இருக்கே உங்கள் கை காட்டல் :-)

 
At 5:30 AM, Blogger P.V.Sri Rangan said...

ஈழநாதன் போட்டிருக்கும் உந்தப் படம் எப்படிப்பிடிக்கப்பட்டது?பாருங்கள் எல்லோரும் அட்டைகளால் தங்கள் முகங்களை மூடுவதை!:-(இதுகூடப் புரியாத மனிதர்களா இந்தத் தமிழ்ச் சமுதாயத்வர்கள்?
:-|

 
At 9:11 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ஜனநாயகம் நேற்று இணையத்தில் உலாவும் போது 3/8'' நட்டொன்று கண்டெடுத்தேன் உங்களுடையதா?முக்கியமான பொருட்களை இப்படியா தவறவிடுவது?

அய்யா கருணா பெல்ஜியத்தில் மொத்தம் 47 தமிழ்க்குடும்பம் தான் இருக்கென்ற புள்ளிவிபரம் உங்கள் ஆட்களிடமிருந்துதான் வந்தது.அவர்கள் தான் தமக்குப் படியளக்கும் இலங்கைத் தூதரகத்தில் இருந்து பெற்று பெரிய பவராக இணையத்திலும் போட்டிருக்கிறார்கள்.நான் அங்கிருந்துதான் படித்தேன்

உங்கள் கதைப்படி பார்த்தால்.ஐரோப்பாவில் புலிகளுக்குத் தடை அந்தப் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்கள் மரண பயத்தில் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் படம் எடுத்தால் உங்களைத் தாக்குவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.அவர்களின் விபரங்களை நீங்கள் தேனியிலும் இலையானிலும் பிரசுரித்தால் வீடு தேடி வந்தும் உங்களை அடிக்கலாம்.

பியர் குடித்ததை எங்காவது தப்பென்று சொன்னேனா என்ன பியர் என்றுதான் கேட்டேன் இதிலென்ன தப்பு.இதையே அன்றைக்கு நடந்த கூட்டத்தில் பியர் குடித்தவாறு படம் எடுத்திருந்தால் மந்தைகளுக்குப் பதிலாக பியர் குடுத்துக் கூட்டிய கூட்டம் என்றிருப்பீர்கள் ஊருக்கு உபதேசிப்பதில் வல்லவராயிற்றே

அதெப்படி 23 ஜனநாயக காவலர்களும் அடித்ததை படம் பிடித்துப் போடவில்லையா?புலிகள் யாரையாவது அடிக்கும்போது எடுத்த படம் வைத்திருக்கிறீர்களா?

பாருங்கள் அந்தப் அப்படம் எடுத்த அப்பாவி இளைஞன் பயந்து பயந்து பின்னாலே நின்று படம் எடுத்திருக்கிறான்.அவனால் ஏன் முன்னாலே போய்நின்று படம் எடுக்கமுடியவில்லை.ஜனநாயகத்தின் காவலர்கள் பிய்த்துத் தின்றுவிடுவீர்களே

இந்தப் பதிவு நான் போட்டதற்குக் காரணம் அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை நீங்கள் மந்தைகள் என்று வர்ணித்தமைதான்.புலிகளை நீங்கள் திட்டுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை

 
At 5:10 AM, Blogger P.V.Sri Rangan said...

தம்பி ஈழநாதன் கிட்டத்தட்ட 102 பேர்கள் நடாத்திய இந்த அமைதிச் சிற்றணியை ஏன் தம்பி 21பேர்களெனவும்,தரையில் பீர் போத்தல்கள் மற்றும் மதுபானப் போத்தல்களை வைத்து படம் ஒட்டிப் போடுகிறீர்கள்?இது ஆனந்த சங்கரியை வைத்து இராணுவத்தாரோடு ஒட்டிப் போட்டு அம்பலமானமாதிரி இதுவும் மெல்லக் கசியும் அதுவரையும் நடாத்துங்கோ நாடகம்.ஆகப் புலிகளுக்கு அச்சம் தொடங்குகிறது?மக்களின் சுயாதீனச் செயற்பாட்டுக்குப் பாரிய குற்றாச்சாட்டுகளை,சேறடிப்புகளைச் செய்து புலிகளே அம்பலமாகிறதைப் பார்க்கிறபோது நம்ம தமிழ் மக்களின் அரசியல் வறுமை இப்படியெல்லாம் சிந்திக்கிறார்களேயென நோகத் தோன்றுகிறது.

 
At 9:19 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் கருணா
ஓமடா பொடியா நாங்கள்தான் குடித்தோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பதில் சொல்லியிருந்தால் உங்கள் கருத்தியல் தளம் ஆட்டம் காணவில்லை என்று ஒத்துக்கொண்டிருப்பேன்.இப்போது சங்கரியை விடக் கேவலமானவனாக ஒளியத்தொடங்கிவிட்டீர் படத்தில் பியர் போத்தல் ஒட்டிப்போட்டமாம் எங்களுக்கென்ன இதே வேலை உங்களை மாதிரி வீட்டுச்சுவரிலை புலிகளுக்கெதிராச் சுவரொட்டி ஒட்டி அதைப் படமெடுத்துப் போட்டு கனடாவெங்கும் புலிகளுக்கு எதிராக சுவரொட்டிகள் என்று கதை விடுற ஆக்கள் எல்லே நீங்கள்.படத்திலேயே தெரியுதே 21 ஆ 102 ஆ என்று.அதுசரி உங்களுக்கும் நிதர்சனம் கொம்முக்கும் பலமான உறவுபோல கிடக்கு ஆர்ப்பாட்டத்திலை கலந்துகொண்டவர்களை நேருக்கு நேர் படமெடுத்துப் போட்டிருக்கிறார்கள்.நீங்கள் தான் கொடுத்தீர்களோ அல்லது அவர்களோடுதான் கூட்டோ.

அமைதிப்பேரணியில் கலந்துகொண்ட 20 ஆயிரம் பேரையும் ஆட்டுமந்தைகள் என்று சேறும் சுரியும் அடித்தது உங்கள் ஜனநாயகக் கும்பல் தானேயப்பூ

 
At 10:44 PM, Blogger P.V.Sri Rangan said...

எட ராச,உந்த ஜனநாயகக் கூட்டணிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.ஆனால் மாற்றுக்கருத்துக்கு எதிரான கருத்தை எதிர்பதுதான் எனது மனது.அதாவது ஈழநாதரே அரசியல் பன்மைத்துவம் எண்ட சாமானைத்'துஷ்பிரயோகம்'செய்யும் நம்ட அரசியல் சூழலில் இப்படி எழும் பன்மைத்துவக் கருத்துகளை கூட்டோடு அழிப்பதுக்கு எதிரானவன் நான்.மற்றும்படி உந்தக் குமாரதுரை,ரீ.பீ.சீ சவுக்குத் தோப்புக் கொலைக்காரன் புளட் ஜெகநான் கோஷ்டியைப் பற்றி நமக்கு நல்ல தெளிவுண்டு ராச.பெல்ஜியத்துக்கு நான் போகமலே அதை ஆதரித்தேன்.எதற்காகத் தம்பி?மாற்றுக் கருத்து,ஜனநாயகம்-அரசியல் பன்மைத்துவம்,மக்கள் நலம் குறித்தே.ஆனால் உந்தக் கும்பலும் கிலுசுகெட்ட பயங்கரவாதிகள்தான் எண்டதை நாமளும் அறிவோம் தம்பி.இவர்கள்பற்றிய ரயாகரனின் கருத்தே எனதும்.ஆனால் தம்பி,அவர்களின் இன்றைய முன்னெடுப்புச் சரியானது.ஆனால் அது அவர்களின் நலனுக்காகவே 'அவர்கள்'செய்கிறார்கள்.நாம 'வெறும்'மனிதர்கள்.எமக்கு நாலு வார்தை எமுத வருமே தவிர'கூட்டம்'போட,ஊர்வலம் செய்ய...அந்தளவுக்கு அரசியல் பிற்புலமில்லை.அவ்வளவுதான் ராசா.

 

Post a Comment

<< Home