Thursday, January 27, 2005

உயரப் பறக்கும் காகங்கள்

.


ஆசிரியர்:ஆ.சி.கந்தரஜா
நூற்பிரிவு:சிறுகதைத் தொகுப்பு
பக்கங்கள்:144
பதிப்பு:2003

ஆ.சி. கந்தராஜாவின் உயரப் பறக்கும்
காகங்கள் ஒரு பார்வை!


சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி )

தமிழ்புலத்திற்கு அப்பால் ஒரு உலகம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Monday, January 24, 2005

உயிர் கொல்லும் வார்த்தைகள்



ஆசிரியர்:சேரன்
விலை:90.00(இந்திய ரூபா)
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'திசை' கொழும்புவிலிருந்து வெளியான 'வீரகேசரி' நாளிதழ் மற்றும் 'சரிநிகர்', கனடாவிலிருந்து பிரசுரமான 'செந்தாமரை' ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல். ஈழப் போராட்டம், ஐரோப்பிய பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்திய ராணுவத் தலையீடு, ஈழத்து முஸ்லீம்களின் நிலை என பல பொருள்கள் சுதந்திரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. புதிய தகவல்களையும் புதிய பார்வையையும், அங்கதத்துடன், தெளிந்த கவித்துவ நடையில், சேரன் வெளிப்படுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், இதழியல் சுதந்திரம் ஆகியவற்றை இவை முன்னிறுத்துகின்றன. கோபத்தையும் சோகத்தையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் சேரனின் இந்தக் கட்டுரைகள் தீவிர விவாதங்களை எழுப்ப வல்லவை.....(காலச்சுவடு).

நன்றி காமதேனு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Sunday, January 16, 2005

செம்மணி



ஆசிரியர்:ஈழத்தின் 24 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு.
பக்கம்:48
வெளியீடு:வெளிச்சம்
விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம்
நடுவப்பணியகம் தமிழீழம்.


'செம்மணி'
-சித்தார்த்த 'சே' குவேரா-


யாழ்ப்பாணம், செம்மணிப் படுகொலைகளை நினைவுகூருமுகமாக
'செம்மணி' என்ற இருபத்துநான்கு கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கிய
நாற்பத்தெட்டுப்பக்கங்களினாலான தொகுதியை,
'வதையுண்டு
சிதையுண்டு
செம்மணித்தரவைவெளியில்
புதையுண்டுபோன
நம் உறவுகளுக்கு
இது படையல்'
என்ற அர்ப்பணிப்புடன் காணக் கிடைத்தது.
முதன்முதலாக, ஒரு தனி நிகழ்வினை எண்ணி
(தனிமனிதர்களின் அறுபதாம் ஆண்டு விழாக்கள்,
தேசியத்தலைவர்களின் பிறந்தநாள்விழாக்கள்
என்பனவற்றினை விடுத்துப்பார்த்தால்) வெளிவந்த
பலரது எண்ணத்தொகுப்பாக இது தமிழிலே இருக்குமோ
என்று எண்ணுகின்றேன். (அண்மையில், 'கார்கில் யுத்தம்'
சம்பந்தமாக சங்கரநாராயணன் ஆக்கி வெளியிட்ட
சிறுகதைத்தொகுப்பொன்று வந்ததாகச் செய்தியும்
திறனாய்வும் வலையில் எங்கோ வாசித்தேன். யாராவது,
அதுபற்றி இங்கு எழுதினால், மகிழ்ச்சி.)

உமா ஜிப்ரான், போன்ற ஓரளவு அறியப்பெற்ற கவிஞர்களும்
புதுவை இரத்தினதுரை போன்ற இயக்கம்சார் கவிஞர்களும்
இன்னும் அறியப்படாத, ஆனால் அழுத்தமான ஒலியினை
எழுப்பும் பலரும் ஒருமிக்கக் குரல்கொடுத்த
தொகுதியாக இ·து அமைந்திருக்கின்றது.

உமா ஜிப்ரானின், 'சிலுவையூன்றாச் சவக்காலை,' கருணாகரனின்
'நிறமிழக்கும் நகரத்தில்,' எஸ்போஸின் 'முள்வெளி,' தூயவளின்
'உன்னோடு ஒரு நிமிடம்,' மலைமகளின் 'உயரும் என்குரல்'
ஆகியன, இவற்றுள் எனக்குப் பிடித்தமானவையாக இருக்கின்றன.

என் பார்வையிலே பழுதோ அல்லது நான் பார்த்தது சரிதானோ தெரியாது;
மலைமகள் கவிதையில் 80'களின் சேரனின் நடையும்
எஸ்போஸின் கவிதையில் வ.ஜ.ச. ஜெயபாலனின் அதே காலகட்ட
எழுத்துப்பாங்கும் (+ ஒரு மொழிபெயர்ப்பூட்டல் உணர்வும்)
உமாஜிப்ரானின் கவிதையில் இவையிரண்டும்
கலந்திசையும் போக்கும் இருப்பதாக எனக்குத் தென்பட்டன.

'மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனிதரை
எழுப்பும் வல்லமை எனக்கில்லை.
ஆனால் கொல்லச் சொன்னவரை
உயிருடன் உலாவும் பிணங்களாக்க
என் குரலுக்கு இயலும்.
வாய்கிழிந்து நரம்பு பிளந்து
குருதி வழிகையிலும் என் குரல் அதிரும்.
ஆதிக்கக் கோட்டைகள் உதிரும்வரையில்
எனது குரல் உயரும்.' -மலைமகள்

'சாக்குருவியின் துயர்ப்பாடலால் உறுஞ்சப்பட்ட
மிகப் பழைய மனிதனின் மரணம்
ஈரப்பாடை பற்றிய எல்லோரின் கனவுகளிலும்
ஈரித்துறைந்தது.
தீயின் வெம்மையடங்கி சாம்பல் பூத்த
அவனுடைய மரணம்
ஆன்ம வெளிகுதறும் அப்பாடலில் பின்னப்பட்டபோது
பூக்களினதும்
ஊதுபத்தி, மஞ்சள் நீரினதும் வாசனை
வெளியின் மடிப்புகளில் ஊர்ந்தது.
அந்த மிகப்பழைய மனிதனின் கனவுகள்
-மண் பற்றியதும், விடிவுபற்றியதும் ஆதிமொழிபற்றியதும்-
வரண்டழிந்த ஒரு காலத்தில்
சாக்குருவியின் துயர்ப்பாடலில் விழுந்த மரணத்திற்காக
அவனது குழந்தைகள் அழுதார்கள்;
இதயத்தின் சோகத்தை உருக்கி
மனசெங்கும் பரவினர்.' ' - எஸ்போஸ்

'உண்மைகள்
காணாமல்போன மனிதர்களை பிணங்களாய்க் கிளர்த்தின.
மண்ணகழ்ந்த கிடங்குகளில் மனிதர்களை நிரவி
செம்மணிவயலில் சாவிளைத்த இராணுவச்சாகசம்
சந்தி சிரித்தது.
உயிர்ப்பொறை உரியுண்டு உயிர்சுண்டிய
எம் புருஷர் தேகப்பொதிகள்
செம்மணியின் கள்ளறையுள்ளிருந்து புகைந்தன.
வனப்புமிகு எம் பெண்டிர்
தசைபுசித்த வெறியுடல்கள்
தசைகுளிரும் பொழுதுவரை புசித்த
தசைவெறி உடல்கள்
செம்மணியின் பசியமண்ணில் பதனமிட்ட பிண்டங்கள்
தெருக்களில் சம்மணமிட்டு வார்த்தையாடின.

குழிகளில் புழுத்த
உடல்கிளைத்த வயிறுகளின்
ஒப்பாரிப்பாடல்பெற்ற ஸ்தலமாயிற்று செம்மணி.' - உமாஜிப்ரான்.

கருணாகரனின் 'நிறமிழக்கும் நகரத்தில்' தமிழ்க்கவிதைப்பரப்பளவில்
உணர்வூட்டமாக இருந்தாலும் (தலைப்பும் கவிதைத் தொடக்கமும்,
ஏனோ நட்சத்திரன் செவ்விந்தியனின் 'பீற்றர்சன் றோட்டுக்கும் WA
சில்வாமாவத்தவுக்கும் இடையில்' இனை நினைவூட்டியது என்பது
வெறூ விடயம்) தன்னளவில் ஈழத்துக்கவிதைகளின் தடம்பழகிப்போன
எழுத்துக்கு ஒரு செவ்விய உதாரணம்.

'அது வனமொன்றின்
இரகசிய அடுக்குகளில் நிகழவில்லை.
கனவுகளும் பாதச்சுவடுகளும் அழிந்த கிராமங்களில்
வெண்கொடிகள் நடப்பட்ட நகரின்
இருள் ஆழங்களில்
பேச்ச்சொடுங்கி
பாடல்களும் ஒளியும் வற்றிய
இரவுகளில்
ஒதுக்குப்புற வெளியில்
உவர்ப்புதர்களின் கீழ் ரகசிய மடிப்புகளில்
அது நிகழ்ந்தது.
...
வயற்கரையில்
அதன் முதிய வளைவீடுகளில்
மூன்று குஞ்சுகளும்
குஞ்சாகும் இரண்டு முட்டைகளும்
அந்தப்புதைகுழிகளில் மூடுண்டன.
நண்டின் வளைகள் மீதும் நாலுகுழிகள் ஐயோ
அக்கணமோ
குரலை விழுங்கி அக்குருவி தவித்தது
தன் விதியழியத் தானே பார்த்துத் துடித்தது.
அவ்வெளியில் விரிந்த பயங்கரங்கண்டு
அது விறைத்தது.' - கருணாகரன்.

எழுதியவரின் பெயரின்றி, யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால்
வெளியிடப்பட்ட கவிதை, 'அமைதிநகரின் மன்னம்பெரிகள்,'
மிகுதி முழுக்கவிதைகளிலிருந்தும் வித்தியாசமான சரித்திர,
புராண இழைகளினை தன் பாடுபொருளின் நடப்போடு கோர்த்துச்
சொல்லமுயலும் ஒரு முயற்சி. அந்த அளவில் அது தன்னளவில்
ஒரு நல்ல கவிதை.

அவலச்சுவையும் ஆத்திரமும் கவலையும் வெறியும் வேதனையும்
மாறிமாறி ஒலிக்கும் குரல்களினாலான இந்தப்படைப்புகளில்,
புதுவை இரத்தினதுரையின் பாடலும் கவிதையும் வெறும்
எழுச்சிக்கோரிக்கைகளின் தொகுப்பும் கேள்விகளுமாகச்
சுருங்கிப்போய்விடுகின்றன.

மிகுதிக்கவிதைகளின் ஆக்கத்தில் தேவைக்கதிகமான கேள்விகளும்
கோஷங்களும் சொல்வேள்விகளும் நிகழ்ந்தன போலொரு தோற்றம்;
அத்தகைய நிலை, சில அபூர்வமான கவியிழைகள் தென்படினும்,
அவற்றில் கவிதையின் செழுமையினை முற்றாகப்
படரவிடத் தடையாக இருப்பதாக எனக்குப்படுகின்றது

பொதுவாக, இந்தத்தொகுதி அதன் இலக்கெண்ணிப் பார்க்கும்போது,
ஒரு வெற்றிக்குரியது என்பதில் ஏதும் மறுப்பிருக்கமுடியாது; அதனளவிலே
மனதில் நிகழ்ந்த நிகழ்வினைப் பதியவைக்கும் அதன் படைப்புகள் பாராட்டுக்குரியன.
ஆனால், இவை வாசிக்கப்பட வேண்டிய புலம் ஈழத்துக்கு அப்பால் என்றே
தென்படுகின்றது.

இந்த நோக்கத்துக்கு அப்பால், இந்தக்கவிதைகள், ஈழத்துக்கவிதைகள்
எந்த அளவுக்குத் தம் '80களின் போராட்டக்காலத்தடங்களுக்கு அப்பால்,
இருந்து வெளிவந்து உயிர்ப்பான புதுப்படிமங்களையும் நடைகளினையும்
தரவேண்டிய பரிதாபகரமான நிலையில் இருக்கின்றன என்பதினைத் தெளிவாகச்
சொல்கின்றனவுமாகி இருக்கின்றன. ஈழத்துப்படைப்பாளிகள் விரும்பியோ
விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய உண்மை இது.

இதே போல, தர்மபுரிமாவட்டத்தின் அண்மைய படுகொலைகளினையும்
இலக்குவைத்து ஒரு தொகுதி வெளிவருவது, அவற்றின் விளைவுகளினை
என்றைக்கும் நினைவூட்டும் விதமாக இருக்குமென்று படுகின்றது.

நன்றி:பதிவுகள்,தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Friday, January 14, 2005

வெள்ளாவி

.
ஆசிரியர்:விமல் குழந்தைவேல்
விலை:125.00(இந்திய ரூபா)
வெளியீடு:உயிர்மை பதிப்பகம்,சென்னை.இந்தியா.

"நீண்ட நெடுந்தொலைவு போய் புலம்பெயரியாய் ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விமலின் ஆன்மா இரவுக்காட்சி படம் பார்த்துவிட்டு சாறனை தூக்கிக் கட்டியபடியும், கோவில் சுவர்களில் குந்தியிருந்து ஊர்ப்புதினங்களைப் பேசியும், எழுவட்டுவான் மைதானத்தில் உதைபந்த விளையாட்டுக்குப் பிறகான மிகுமாலை அமைதியில் இஞ்சிப் பிளோன்டியொன்றின் உசாரில் காலை நீட்டி உட்கார்ந்து வியர்வை காய்ந்த பனிபெய்து நனைக்கும் வரைக்கும் பகிடி பேசிச் சிரித்தாயும், கோளாவில் மணல் தெருக்களில் சைக்கிளையும், துயரம் நொறுக்கும் வாழ்வையும் தள்ளியபடியும் இழந்த வாழ்வின் சாரங்களை இன்றும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது. இறந்த வாழ்வின் மகோன்னதத் தருணங்களை, திரும்பவொருத்தரம் நமக்கு வாய்க்க வைத்திருக்கிறார் விமல்".....உயிர்மை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்