Monday, May 30, 2005

அண்மைக்கால அறுவடைகள்

.
ஆசிரியர்:இரத்தின வேலோன்
வகை:கட்டுரைகள்
வெளியீடு:மீரா பதிப்பகம்.கொழும்பு
பக்கங்கள்:98
விலை:150.00(இலங்கை ரூ)

இன்று தமிழில் வெளிவரக்கூடிய அனைத்து எழுத்துக்கள்,படைப்புகள் மீதான பதிவுகள் பார்வைகள் உரியவாறு வெளிவருவதில்லை. ஆயினும் சிலர் இவ்வாறான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பத்திரிகைகள் இதழ்களில் வரக்கூடிய தமது பார்வைக்கு கிடைக்கக்கூடிய நூல்களுக்கான பதவுகளை எழுதிச் செல்கின்றனர். வாசிப்பு கலாசாரத்துக்கு இந்த முயற்சிகள் உறுதுணையாக இருப்பவை.

இந்த ரீதியில் ஈழத்து எழுத்தாளர் 'அண்மைக்கால அறுவடைகள்' என்னும் தலைப்பில் தொன்னூறுகளில் வெளிவந்த இருபது ஈழச் சிறுகதை தொகுப்புகள் மீதான பார்வையை தொகுத்துள்ளார்.

இந்தத் தொகுப்புகள் மீதான கவனயீர்ப்பை வாசகப் பரப்பில் கொண்டு செல்வதும். அறிமுகம் செய்வதும், அதேநேரம் சாத்தியமான வகையில் விமரிசனக் கூறுகளை தன்னகத்தை கொண்டு வெளிப்படுத்துவதும் தேவையானது. இப்பண்புகள் நிரம்பிய நூலாகவே இது உள்ளது.

ஒரு படைப்பாளி சக படைப்பாளிகளின் படைப்புகள் மீதான அபிப்பிராயத்தை பார்வைக் கண்ணோட்டங்களை 'பொதுநோக்கில்' வெளிப்படுத்த எத்தனிப்பது படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய நற்குணங்களுக்குள் ஒன்று எனலாம். இந்த வகையில் இரத்தினவேலோன் மதிப்புக்குரியவராகிறார்.

இந்நூலில் சம்பந்தன் கதைகள்; ஈழகேசரி சிறுகதைகள்; சிறுகை நீட்டி; அங்கையன் கதைகள்; சமுதாயத் தோப்பில் சாய்ந்த தென்னைகள்; பிறந்த மண்; மனத்தூறல்; புதிய வீட்டில்; எங்கள் தேசம்; கொட்டியாரக் கதைகள்; அந்த ஆவணி ஆறு; மாங்கல்யம் தந்து நீயே...; கமகநிலா; வேட்கை; சிவாவின் சிறுகதைகள்; நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள்; எழு சிறுகதைகள்; ஒரு தேவதைக் கனவு; ஒரு நாட்பேர்; வரண்டு போன மேகங்கள் என இருபதுகள்.

இவை படைப்பிலக்கியம் பற்றிய அறிவுக்கும் தேர்ச்சிக்கும் ஆழமான ஆய்வுக்கும், சிறுகதைகளின் வளர்ச்சிக்கும் வரலாற்றுக்கும் உரிய களங்கள் நோக்கி... நமது கவனத்தை குவிக்க ஆர்வத்தைத் தூணடும் நூல்.
நன்றி:ஆறாம்திணை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்